தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Avani Month Rishabam: ‘சோகங்கள் எனக்கு நெஞ்சோரம் இருக்கு..’ ரிஷப ராசிக்கான ஆவணி பலன்கள்!

Avani Month Rishabam: ‘சோகங்கள் எனக்கு நெஞ்சோரம் இருக்கு..’ ரிஷப ராசிக்கான ஆவணி பலன்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 11, 2023 11:51 AM IST

Rishabam Rasi: ‘காதலர்கள் தம்பதிகளாக மாறும் மாதம். காதலை சொல்ல தயங்கியவர்கள், தைரியமாக காதலை சொல்வீர்கள்’

மேஷ ராசிக்கான ஆவணி மாத பலன்கள்
மேஷ ராசிக்கான ஆவணி மாத பலன்கள்

3ல் சுக்கிரன், 4ல் சூரியன், செவ்வாய், புதன். 6ல் கேது உள்ளனர். இந்த மாதிரி சஞ்சாரம் இருக்கும் போது ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?

வேலையில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்பு கூடி, பளு அதிகரிக்கும். கூடுதல் நேரம் பணியாற்றி, தள்ளாடப் போகிறீர்கள். அதனால் உடல் நலனில் கோளாறு ஏற்படலாம். குறிப்பாக முதுகு எலும்பு பிரச்னைகள் வரலாம். எந்த தொழில் செய்தாலும் அவர்களுக்கு இந்த பிரச்னை வரலாம். கவனமாக உடலை பார்த்துக் கொள்ளவும். 

வீட்டில் இருக்கும் பெண்கள்,  கவனக்குறைவால் கீழே விழ வாய்ப்புள்ளது. எலும்பு தேய்மான பிரச்னைகள் வரலாம். உடன் பிறந்தவர்களின் மருத்துவ செலவுகளை பார்க்கும் பொறுப்பு உங்களுக்கு வரலாம். பெரியவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளலாம். 

மாணவர்களுக்கு கவனக்குறை ஏற்படலாம். ஆவணி முழுக்க இந்த பிரச்னையால் தடுமாறுவீர்கள். இதனால் மதிப்பெண் குறையலாம். வெளிநாடு, வெளியே செல்ல நினைப்பவர்களுக்கு இது சரியான காலம். முயற்சித்தால் பலன் கிடைக்கும்.

மாமா உறவின் முறையில் பிரச்னைகள் வரலாம். இருவருக்கும் கருத்து வேறுகள் வரும். பிந்நாளில் அவர்கள் உதவுவார்கள் என்பதால், அதை கருத்தில் கொள்ளவும். அத்தை வழிகளில் பூசல் வரலாம். 

கண், காது, மூக்கு, தொண்டையில் சில சில பிரச்னைகள் இரு பாலருக்கும் வரலாம். சின்ன பிரச்னை வந்தாலும் மருத்துவரை அணுகி, சரி செய்து கொள்ளவும். 

 துர்கை வழிபாடு உங்களுக்கு கனகசப்புகளை தவிர்க்கும். அண்டை வீட்டாரிடம் மனகசப்பு ஏற்பட்டு, வம்பு வழக்குகள் வரலாம்.  அந்த வழக்கில் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். லோன் வசதிகள் கிடைக்கும்.

காதலர்கள் தம்பதிகளாக மாறும் மாதம். காதலை சொல்ல தயங்கியவர்கள், தைரியமாக காதலை சொல்வீர்கள். 

இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். மகாலட்சுமி வழிபாடு சிறப்பாக இருக்கும். இயற்கையாக வர வேண்டிய லாபம், ஒரு மடங்கு அதிகரிக்கலாம். வரலட்சுமி பூஜை, கோகுலாஷ்டமி வருகிறது. அந்த வழிபாடு உங்களுக்கு முக்கியம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்