தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Avani Month Mesham: ‘நெல்சன் மனநிலைக்கு மாறப் போறீங்க’ மேஷத்திற்கு ஆவணியில் திடீர் வெற்றி உறுதி!

Avani Month Mesham: ‘நெல்சன் மனநிலைக்கு மாறப் போறீங்க’ மேஷத்திற்கு ஆவணியில் திடீர் வெற்றி உறுதி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 11, 2023 11:26 AM IST

Mesham horoscope: தொழிலில் சோர்ந்து போயிருந்த நீங்கள், திடீரென உச்சத்திற்கு போவீர்கள். ஒரு நாள் கூட நிமிடத்தில் போய்விடும்.

மேஷ ராசிக்கான ஆவணி மாத பலன்கள்
மேஷ ராசிக்கான ஆவணி மாத பலன்கள்

ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் செப்டம்பர் 17 ம் தேதி வரை ஆவணி மாதத்தில் சூரிய பகவான் சிம்மத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் மேஷத்திற்கு 5வது இடத்தில் சூரிய பகவான் இருப்பார். அவருடன் செவ்வாய், புதன் என மூன்று கிரகங்கள் இருக்கும். 

மூன்றுமே அரச கிரகங்கள். 4ல் சுக்கிரன் இருப்பார். ஆவணி மாதத்தில் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. குழந்தைக்காக முயற்சித்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வேலையில் பணி உயர்வுக்கு காத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. பள்ளிக்கு, கல்லூரிக்கு போக எரிச்சலடையும் குழந்தைகள், மாணவர்களுக்கு திடீரென கல்வியில் நாட்டம் வரும்.

ஆன்லைன் வியாபாரத்தில், ட்ரெடிங் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொற்காலம். எதை தொட்டாலும் லாபம் தான். நஷ்டம் பெரிய அளவில் இருக்காது. சோகங்களை சூரியபகவான் தீர்க்கப் போகிறார். 

தொழிலில் சோர்ந்து போயிருந்த நீங்கள், திடீரென உச்சத்திற்கு போவீர்கள். ஒரு நாள் கூட நிமிடத்தில் போய்விடும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் மாதம். 

பெண்களின் உடல் நலனில் கவனம் தேவை. வயிற்றுக்கு கீழே பிரச்னைகள் வரலாம். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைகள் தீரும். அதே நேரத்தில் மூன்றாம் நபர் குறுக்கீடு இருந்தால் பிரச்னை வரும். அதற்கு இடம் தர வேண்டாம். 4ல் சுக்கிரன் இருப்பதால், தாயார் உடலில் அக்கறை வேண்டும். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வலியுறுத்தவும்.

வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். ஒரு வேலை செய்யும் போது, ஒருவித குழப்பம் இருக்கும். அந்த உங்களை அறியாமல் வரும்.  சோம்பலுக்கு இடம் தர வேண்டாம். 

சிவபெருமான் வழிபாடு, பிரதோஷ வழிபாடு உங்களுக்கு பெரிய பலன் தரும். விநாயகர் வழிபாடு, ஒவ்வொரு சனி தோறும் தேங்காய் உடைக்கலாம். இதை செய்தால் நிச்சயம் உங்களுக்கு பலனுள்ள மாதமாக இருக்கும் மேஷ ராசிக்காரர்களே!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்