தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus Luck: சுக்கிரன் உதயத்தால் உச்சம் சொல்லும் ராசிகள்

Venus Luck: சுக்கிரன் உதயத்தால் உச்சம் சொல்லும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 27, 2023 12:50 PM IST

சுக்கிரனின் உதயத்தால் பலன் பெறப்போகும் ராசிக்காரர்கள்

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அஸ்தமன நிலையில் இருந்த சுக்கிர பகவான் கடக ராசியில் உதயமானார். இதனால் சில ராசிகளுக்கு இருந்த சிக்கல்கள் விலகி நற்பலன்கள் கிடைக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் நான்காம் இடத்தில் உதயமாகியுள்ளார். இந்த ராசிக்காரர்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வந்த காரணத்தினால் தற்போது சுக்கிர பகவான் அவர்களுக்கு விடுதலையை கொடுத்துள்ளார். புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலிருந்து சிக்கல்கள் விலகி அமைதி அதிகமாகும். அனைவரிடத்திலும் உறவு பலமாகும். வியாபாரத்தில் உள்ள லாபம் கிடைக்கும்.

கடக ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான வழிகளில் இருந்து முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. மற்றவர்களை ஈர்க்கும் வகையில் செயல்படுவீர்கள். பண வரவில் எந்த குறையும் இருக்காது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகர ராசி

 

சுக்கிர பகவான் மகர ராசியில் ஏழாம் வீட்டில் உதயமாக உள்ள காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சிறப்பாக பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகமாகும். திருமணம் ஆகாத அவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் நல்ல லாபத்தை பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்