தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  முடிவு பெற்ற ராகு சூரிய சேர்க்கை.. இனிமேல் இந்த 3 ராசிகளை அசைக்க முடியாது.. பணமழை கொட்டுவது உறுதி

முடிவு பெற்ற ராகு சூரிய சேர்க்கை.. இனிமேல் இந்த 3 ராசிகளை அசைக்க முடியாது.. பணமழை கொட்டுவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2024 03:49 PM IST

Rahu and Surya: இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானோடு சூரிய பகவானும் பயணம் செய்து வந்தார். தற்போது இவர்களுடைய சேர்க்கை முடிவடைந்துள்ளது. இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சூரிய சேர்க்கை
சூரிய சேர்க்கை

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் சனி பகவானுக்குப் பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானோடு சூரிய பகவானும் பயணம் செய்து வந்தார். தற்போது இவர்களுடைய சேர்க்கை முடிவடைந்துள்ளது. இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

ராகு சூரிய சேர்க்கை நிறைவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. அதற்கு முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்களோடு வெற்றி காண்பார்கள்.

மிதுன ராசி

 

ராகு பகவான் சூரிய சேர்க்கை நிறைவு பெற்ற காரணத்தினால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இனிமேல் உங்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றியில் முடிவடையும்.

மீன ராசி

 

ராகு சூரிய சேர்க்கை உங்களுக்கு முடிந்து விட்டது. இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel