தமிழ் செய்திகள்  /  Astrology  /  Amazing Benefits For Gemini, Taurus - Today's Horoscope (21.05.2023)

Today's Rasi Palan : மிதுனம், ரிஷப ராசிக்கு அற்புத பலன்கள் கிட்டும் நாள் - இன்றைய ராசி பலன் (21.05.2023)

Priyadarshini R HT Tamil
May 21, 2023 06:44 AM IST

Today's Horoscope : மிதுனம், ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதால், மிதுனம், ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிட்டும்.

இன்றைய ராசி பலன் (21,05,2023)
இன்றைய ராசி பலன் (21,05,2023)

ரிஷபம் - சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள், வெற்றி கிட்டும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டு. நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். கல்வியில் மேல்நிலையை அடைவீர்கள். உயர்கல்வி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு பிராயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெற்றி கிட்டும் என்பதால் பிராயணங்களை மன தைரியத்துடன் மேற்கொள்ளலாம்.

மிதுனம் - குடும்பத்தில் வயதானவர்களுடன் சர்ச்சை ஏற்படும். அனுசரித்துச் செல்ல வேண்டும் உறவினர்கள், நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். நிதி உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பேச்சு பேசாமல் இருந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

கடகம் - சேமிப்புகளை உருவாக்குவது, சொத்துக்களை விற்பது, வாங்குவது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி உதவி கிட்டும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பாரட்டுகள் கிட்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபடும் காலம். தனவரவு உண்டாகும். அலைச்சல்கள் வரும். அவற்றால் நன்மை உண்டாகும்.

சிம்மம் - கல்வியிவ் கவனம் தேவை. சிறு குழந்தைகளை படிக்க உட்கார வைப்பதில் சிரமம் நிலவும். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உணவுப்பொருட்களில் கவனம் தேவை. சொந்த தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டாலும், அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நாளின் பிற்பகுதியில் சுபகாரிய செய்திகள் வந்து சேர வாய்ப்பு உண்டு. தட்சிணாமூர்த்தியை வழிபட மகிழ்ச்சி பெருகும்.

கன்னி - உத்யோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், கல்வி முயற்சிகள் வெற்றிபெறும். சொந்த தொழில் சிந்தனை அதிகரிக்கும். சுயதொழிலில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உண்டாகும் நாளின் பிற்பகுதியில் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உறவினர் வருகை, விருந்துக்கு செல்வது போன்ற மகிழ்ச்சியான செயல்பாடுகள் இருக்கும்.

துலாம் - உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் கிட்டும். கணவன் - மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிட்டும். உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை உண்டாக வழி உண்டு. சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.

விருச்சிகம் - நண்பர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாகச் சமாளிப்பீர்கள். சொந்த தொழிலில் முன்னேற்றம் உண்டு. வாகன வகையில் ஆதாயம் இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள். பூர்வீக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சற்று இழுபறியாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான காலம். வேலையில் உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு கிட்டும்.

தனுசு - நண்பர்களால் மனமகிழ்ச்சி, குடும்பத்தினரால் மனமகிழ்ச்சி, கணவன் - மனைவி ஒற்றுமை என இனிய நாள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப்பெறும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். இருப்பினும் வெற்றிகராமாக எதிர்கொள்வீர்கள். தனவரவு உண்டாகும். புது தொழில் முயற்சிகள் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

மகரம் - மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. சொந்த தொழில் செய்பவர்கள் சிறிய பிரச்னைகளை சந்தித்தாலும், வெற்றியை நோக்கிய பிராயணமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொறுமையை கைகொள்வது நல்லது. கோபத்தை குறைத்து குணத்தை பெருக்கிக்கொள்ளுங்கள். திருமணம் தொடர்பான காரியங்களில் சிறிது கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்பம் - இரும்பு தொழில், ரியல் எஸ்டேட், ஆயில் அண்ட் கேஸ் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்க வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமமான நல்ல நாளாக இருக்கும். கல்விச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சொந்த தொழிலில் சிறிதளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் நாளின் பிற்பகுதியில் தனவரவு உண்டாகும். சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிட்டும்.

மீனம் - திருமண, சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை. குறிப்பாக கணிதத்தில் அதிக கவனம் தேவை. ஆராய்ச்சி, வெளிநாட்டு கல்விகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும், உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்து வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். பிற்பகலில் உடல் அசதி அதிகமாக இருக்கும். இன்றைய இரவில் தூக்கம் நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்