தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Maavilakku Worship: குலதெயவத்தின் அருள், தொழில் வளர்ச்சி பெற உதவும் ஆடி வெள்ளி மாவிளக்கு வழிபாடு

Aadi Maavilakku Worship: குலதெயவத்தின் அருள், தொழில் வளர்ச்சி பெற உதவும் ஆடி வெள்ளி மாவிளக்கு வழிபாடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 28, 2023 11:03 AM IST

ஆடி மாத வழிபாடுகளில் ஒன்றாக மாவிளக்கு வழிபாடு இருந்து வருகிறது. மாவளிக்கு வழிபாடு செய்வதன் மூலம் தொழிலில் அமோக வளர்ச்சி பெறுவதோடு, வம்சத்துக்கு துன்பம் ஏற்படாமல் காக்கலாம் என நம்பப்படுகிறது.

மாவிளக்கு வழிபாடு தரும் நன்மைகள்
மாவிளக்கு வழிபாடு தரும் நன்மைகள்

ஆடி மாதம் அம்மனை வழிபடுவதுபோல் குலதெய்வ வழிபாட்டையும் பல்வேறு நன்மைகளை பெறலாம். ஆடி மாதத்தில் குல தெய்வத்துக்குமாவிளக்கு போடுவது பல்வேறு விஷேச பலன்களை தரும். திருமணம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுபிரார்த்தித்துக் கொள்வதால், நிகழ்ச்சிகள் எந்த வித தடங்கலும் இன்றி நடக்கும் என நம்பப்படுகிறது.

வருடத்துக்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்கள் வம்சத்துக்கு எப்போதும் இருக்கும். துன்பமும் ஏற்படாமல் காக்கும். தொழில் வளர்ச்சி மேன்மையடைவதுடன், துஷ்ட சக்திகள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அணுகாமல் காக்கும்.

இதுமட்டுமில்லாமல் தொழிலில் அமோக வளர்ச்சி பெறவும் மாவிளக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. தொழில் நடக்கும் இடத்தை சுத்தம் செய்த பிறகு அம்மனின் பாதத்துக்குவாழை இலையை போட்டு அதில் இரண்டு மாவிளக்கு வைத்து அதோடு வெற்றிலை பாக்கை வைக்க வேண்டும்.

பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களையும் ஒன்றாக சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழி போல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து வேண்டி கொள்வது தான் மாவிளக்கு வழிபாடு. மாவிளக்கில் ஐந்து திரிகளை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது.

மாவிளக்கை ஏற்றிய பிறகு தேங்காய் உடைத்து கற்பூர தீபாரதனை காட்ட வேண்டும். பிறகு திரி முழுவதும் எறிவதற்கு முன்பாக அந்த திரிகளை எடுத்து வேறு ஒரு தட்டிலோ அல்லது இலையிலோ வைத்துவிட வேண்டும்.

ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்