தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  World's Highest Railway Bridge Unveiled In Jammu And Kashmir

Video: உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த தேசியக் கொடி

Aug 15, 2022, 12:53 PM IST

உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் இந்த ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1486 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் 1315 மீட்டர் ஆகும். இதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட இருக்கிறது. திறப்பு விழாவையொட்டி பாலத்தின் நடுவில் அமைந்துள்ள ‘கோல்டன் ஜாயிண்ட்’ என்ற இடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை கைகளில் ஏந்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செனாப் ரயில்வே பாலம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். இந்த பாலத்தில் வரும் டிசம்பர் மாதம் ரயில் போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.