தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காதலர் தினத்தன்று உங்கள் காதலியை இப்படியும் அசத்தலமா? போட்டி புதுசா இருக்கே…

காதலர் தினத்தன்று உங்கள் காதலியை இப்படியும் அசத்தலமா? போட்டி புதுசா இருக்கே…

Priyadarshini R HT Tamil

Feb 10, 2023, 11:36 AM IST

Valentines day: காதலர் தினத்தன்று உங்கள் காதலியை அசத்துவதற்காக ஆண்களுக்கான சமையல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
Valentines day: காதலர் தினத்தன்று உங்கள் காதலியை அசத்துவதற்காக ஆண்களுக்கான சமையல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

Valentines day: காதலர் தினத்தன்று உங்கள் காதலியை அசத்துவதற்காக ஆண்களுக்கான சமையல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் என்றாலே காதலை கொண்டாடும் மாதமாகும். உலகெங்கும் உள்ள காதலர்கள் தங்கள் காதலை கொண்டாடி வருகின்றனர். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் வருகிறது. அதையொட்டிய காதலர் வாரம் பிப்ரவரி 7ம் தேதியே துவங்கிவிட்டது. அது ரோஸ் டே எனப்படும் ரோஜா தினத்தில் துவங்கியது. காதலர் வாரத்தின் இரண்டாவது நாள் ப்ரபோஸ் டே எனப்படும் காதலை சொல்லும் தினம் வரும், அடுத்ததாக மூன்றாவது நாள் சாக்லேட் தினம். அன்று காதலர்கள் சாக்லேட்களை ஒருவருக்கொருவர் பரிசளித்துக்கொள்வார்கள். காதலர் வாரத்தின் 4வது நாள் டெடி டே எனப்படும் காதலர்கள் ஒருவருக்கொருவர் டெடி பியர் பரிசளித்துக்கொள்ளும் தினம் கொண்டாடப்படும். 5வது நாள் ப்ராமிஸ் டே எனப்படும் வாக்குறுதி தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக வாழ்நாள் முழுவதும் இருப்போம் என்று வாக்களித்துக்கொள்வார்கள். காதலர் தினத்தின் ஆறாவது நாள் ஹக் டே எனப்படும் கட்டிப்பிடித்தல் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காதலர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்வர். காதலர் வாரத்தின்7வது நாள் கிஸ் டே எனப்படும் அன்பை முத்தத்தால் பரிமாறிக்கொள்ளும் தினம் கொண்டாடப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். 

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

அன்று காதலர்கள் தங்கள் காதலன்/காதலிக்கு பரிசுகள் கொடுத்தும், டேட்டிங் சென்றும் கொண்டாடுவார்கள். இந்தாண்டு உங்கள் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த காதலனுக்கு ஒரு புதிய சான்ஸ் கிடைத்திருக்கிறது. தனது காதலிக்கு பிடித்த உணவை அவர்கள் சமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதாகும். 

முகநூலில் அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியை ஓசூரைச் சேர்ந்த எஸ்ஹெச்டி மசாலா என்ற நிறுவனத்தை துவக்கியுள்ள ஷ்யாமிளி அறிவித்துள்ளார். அதற்காக அவர் தனது முகநூல் பக்கம் மற்றும் தான் சார்ந்துள்ள சமூக வலைதளங்களில் பதிவு விண்ணப்பங்களை பகிர்ந்துள்ளார். 

போட்டிக்காக தயாரிக்கப்படும் உணவுகள், ‘ரெடி டு குக்‘ எனப்படும் உடனடியாக தயாரிக்கும் உணவாக இருக்கக்கூடாது. ஆண்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும். அதை முழுவதும் வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் உணவு மெயின் கோர்ஸ் உணவாக இருக்க வேண்டும். மற்ற எளிதாக சமைக்கக்கூடிய ஸ்னாக்ஸ் மற்றும் இனிப்பு வகைகளாக இருக்கக்கூடாது என்பது போட்டியின் நிபந்தனைகள் ஆகும். 

இதுகுறித்து ஷ்யாமிளி கூறுகையில், “நமது சமூகத்தில் பெண்களே அதிகம் சமையல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. எனவே ஆண்களையும் சமைக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அதுவும் காதலர் தினத்திற்காக தனது காதலி அல்லது கிரஷ் அல்லது மனைவிக்கு சமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக போட்டி ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. ஆண்களும், போட்டிபோட்டுக்கொண்டு போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு ஒரு நாள் ஓய்வு கிடைக்குமல்லவா? பெண்களுக்கு யாராவது சமைத்துக்கொடுப்பது மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே போட்டியில் கலந்துகொள்ள பெண்கள் அவர்களின் கணவர் அல்லது காதலர் அல்லது கிரஷ்களை ஊக்குவிக்க வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டார். கீழே உள்ள லிங்க் உதவியுடன் நீங்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி