தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: நல்ல செய்தி வந்தாச்சு.. எங்கெல்லாம் அடுத்த 4 நாட்களுக்கு மழை வர போகுது பாருங்க மக்களே!

Weather Update: நல்ல செய்தி வந்தாச்சு.. எங்கெல்லாம் அடுத்த 4 நாட்களுக்கு மழை வர போகுது பாருங்க மக்களே!

Apr 22, 2024, 08:42 AM IST

Weather Update: "தமிழகத்தில் பல பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மறுப்புறம் வெயிலின் தீவிரம் அதிகரிக்கலாம்
Weather Update: "தமிழகத்தில் பல பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மறுப்புறம் வெயிலின் தீவிரம் அதிகரிக்கலாம்

Weather Update: "தமிழகத்தில் பல பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மறுப்புறம் வெயிலின் தீவிரம் அதிகரிக்கலாம்

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மேற்கு தொடச்சி மலையை ஒட்டிய சில பகுதிகளில் ஏப்ரல் தொடக்கத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. பின்னர் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியது. 

இந்நிலையில் இன்று தொடங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழகத்தில் பல பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 

மேலும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இதர உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட ஐந்து டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை 82° பாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுப்புறம் வெயிலின் தீவிரம் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஈரப்பதம்

20.04.2024 முதல் 24.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும் மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-55 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.

உணவு

லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.

தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.

வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை

வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.

தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.

சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.

தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி