தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman: அண்ணனுக்கு உறுதுணையாக இருக்க நினைத்து விஜய் கட்சி தொடங்கியிருக்கலாம்! தமிழக உரிமைக்காக சண்டையிடுவேன் - சீமான்

Seeman: அண்ணனுக்கு உறுதுணையாக இருக்க நினைத்து விஜய் கட்சி தொடங்கியிருக்கலாம்! தமிழக உரிமைக்காக சண்டையிடுவேன் - சீமான்

Jan 28, 2024, 07:45 AM IST

எதிர்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக மாறிய பின்பு அவரை வரவேற்பதும் தான் திமுக கொள்கை. தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போடுகிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம் என திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் கூறினார்.
எதிர்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக மாறிய பின்பு அவரை வரவேற்பதும் தான் திமுக கொள்கை. தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போடுகிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம் என திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் கூறினார்.

எதிர்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக மாறிய பின்பு அவரை வரவேற்பதும் தான் திமுக கொள்கை. தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போடுகிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என விஜய் நினைத்திருக்கலாம் என திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீமான் கூறினார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருக்கும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நிர்வாகிகள் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: "தமிழ்நாட்டில் நிலவி வரும் காவிரி நதி நீர், கச்சத்தீவு உள்பட எதை பற்றியும் கவலை இல்லை. மணல் கொள்ளை செய்யும் திராவிட கட்சிகளை தடுக்காமல் இருக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் கணிமங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதை யாராலும் தடுக்க முடியவில்லை.

காங்கிரஸ், பாஜக என இருகட்சிகளும் எங்களுக்கு எதிரதான். தேசியமே இல்லை என்பது எங்களது கோட்பாடு. அந்த இரு கட்சிகளுடனும் சண்டையிடுவேன். இந்த கட்சிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது.

விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். தமிழ்நாட்டின் உரிமைக்காக அண்ணன் மட்டும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக நிற்போம் என அவர் நினைத்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் எந்த தீய திட்டத்திலும் கருணாநிதியின் பெயர் மறைந்திருக்கும். அநாகரிக அரசியலின் ஆரம்ப புள்ளியாகத்தான் திமுக உள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியதாக மாநாட்டில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.

இந்த கையெழுத்தை பிரதமர், ஜனாதிபதியிடம் கொடுத்திருக்கலாம்.. அதை செய்யவில்லை. விளையாட்டு துறை தொடர்பான நிகழ்ச்சிக்கு வரும்போது கூட இதை செய்திருக்கலாம்.

நீட் தேர்வுக்கான முடிவை செல்லும்பாறு பிரதமரிடம் விளையாட்டு துறை அமைச்சர் ஏன் பேசவில்லை.கேலோ விளையாட்டு போட்டுக்கு கூட தமிழில் பெயர் வைக்க முடியாத நிலையில் தான் திமுக உள்ளது.

பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரத்தான் சந்தித்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் நல்ல உறவு இருக்கு என தெரியவந்துள்ளது.

எதிர்கட்சியாக இருக்கும்போது மோடியை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாக மாறிய பின்பு அவரை வரவேற்பதும் தான் திமுக கொள்கை. திமுகவை ஒழிக்காமல் நல்லாட்சியை வழங்க முடியாது.  முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர்  வெளிநாடு செல்கிறார்.  ஆனால் அதை  ஏற்க முடியாது.  எனது வளங்களை கொள்ளையடிக்கப் போடப்படும் ஒப்பந்தங்களாகவே பார்க்கிறேன்.

நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்படமாட்டாது என்பது அனைவருக்கும் தெரியும். பொழுதுபோக்குக்காக கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்கள். நீட் விலக்கு தொடர்பான கையெழுத்துகளை மாநாட்டில் காண்பிப்பது மட்டும் தான் வேலை. அதை கண்காட்சிக்காக வைத்துள்ளனர். மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளேன். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும், கூட்டணி கிடையாது. மக்களை நம்பித்தான் போட்டியிடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் நாம் தமிழ் கட்சியில் ஆண், பெண் வேட்பாளர்கள் என தலா 20 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யா, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மரிய ஜெனிபர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

டாபிக்ஸ்

அடுத்த செய்தி