தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin : முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin : முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்!

Divya Sekar HT Tamil

Nov 27, 2022, 12:49 PM IST

உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் ஆசிபெற்றார்.
உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் ஆசிபெற்றார்.

உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினிடம் ஆசிபெற்றார்.

நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏரளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்காவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பேரறிஞர் வழியில் மாநில உரிமை காக்க போராடும் முதலமைச்சர்களில் முதல்வர், முத்தமிழறிஞர் வழியில் சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெற்றேன். திமுக தலைவர் அவர்களின் வழியில் மாநில-கழக வளர்ச்சிக்காக உழைப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர், சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களிலும், பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி