தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Karur Train Accident : கரூரில் சோகம்.. ரயில் மோதி உடல் சிதறி இருவர் பலி!

Karur Train Accident : கரூரில் சோகம்.. ரயில் மோதி உடல் சிதறி இருவர் பலி!

Divya Sekar HT Tamil

Feb 14, 2023, 12:25 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் நேற்று ஆண் பெண் இருவர் அவ்வழியாக வந்த மயிலாடுதுறை மைசூர் விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் ரயில்வே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் (50) மற்றும் மாயனூரைச் சேர்ந்த போதும் பொண்ணு (35) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்களது கணவன், மனைவியை பிரிந்து மாயனூரில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் மாயனூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்வதற்காக ரயில் நிலையம் தண்டவாளத்தை கடந்து ஊருக்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயில் மோதியதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இது குறித்து தகவல் இருந்த கரூர் ரயில்வே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி