தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Karaikudi: ரூ.1.36 கோடி முறைகேடு புகார்..நள்ளிரவில் ஆவணங்களை அழிக்க முயன்ற ஊராட்சி செயலர்!

Karaikudi: ரூ.1.36 கோடி முறைகேடு புகார்..நள்ளிரவில் ஆவணங்களை அழிக்க முயன்ற ஊராட்சி செயலர்!

Karthikeyan S HT Tamil

Aug 26, 2023, 11:44 AM IST

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்து ஊராட்சி செயலர் ஆவணங்களை அழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்து ஊராட்சி செயலர் ஆவணங்களை அழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்து ஊராட்சி செயலர் ஆவணங்களை அழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி மோசடி தொடர்பாக உயர் நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் நள்ளிரவில் முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Anbumani : மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ அமோக வெற்றி - பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து!

Fact Check: பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் 1 வாக்கு தான் பெற்றாரா.. எடிட் செய்யப்பட்ட போட்டோ வைரல்

மதவாத அரசியல் சக்திகள் மலரவே முடியாதபடி செய்திருக்கிறோம்.. இந்தியா கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்- முதல்வர்!

Weather Update : மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. உங்கள் பகுதி இருக்கா பாருங்க!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் திமுக மாவட்ட நிர்வாகியான ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன், ஊராட்சி செயலர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தனி அலுவலர் கேசவன் ஆகியோர் ஊராட்சி நிதியில் ஒரு கோடியே 36 லட்சம் முறைகேடு செய்துள்ளதாக கூறி காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் 4 வாரங்களுக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 23.8.2023 அன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி தனது கைபேசியில் எதார்த்தமாக சிசிடிவி வீடியோவை பார்க்கும் பொழுது நள்ளிரவில் ஏதோ ஒரு நபர் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், முக்கிய ஆவணங்கள் உள்ள கோப்புகளை எடுத்து பார்ப்பதும் தெரிய வந்தது. உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில், ஊராட்சி அலுவலகத்தில் நள்ளிரவில் உள்ளே இருந்த அண்ணாமலையை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஊராட்சி செயலர் அண்ணாமலையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.1 கோடியே 36 லட்சம் நிதி மோசடி தொடர்பாக உயர் நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் நள்ளிரவில் முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற ஊராட்சி செயலளரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி