தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Training For Women: பெண்களுக்கு இலவச பயிற்சி – விவரம் உள்ளே…

Training For Women: பெண்களுக்கு இலவச பயிற்சி – விவரம் உள்ளே…

Priyadarshini R HT Tamil

Feb 04, 2023, 12:16 PM IST

புதுவை அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.
புதுவை அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.

புதுவை அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.

புதுவை அரசின் போக்குவரத்து துறை பெண்களின் நலன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் ஓட்டுனர் உரியம் பெறுவதை ஊக்கப்படுத்துவதற்காக அவர்களுக்கென்று பிரத்தியோகமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பழகுனர்/ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுவருகிறது. இதனால் பெண்கள் ஓட்டுனர்/பழகுனர் உரிமம் பெறுவது அதிகரித்து வருகிறது. இன்றைய கால கட்டத்தில் கடினமான தொழில்களுக்கு வர பெண்களிடையே தயக்கம் நிலவினாலும் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

இந்நிலையில் பெண்கள் ஆட்டோ தொழிலில் அதிக அளவில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஓட்டுனர் பயிற்சி மையம் இல்லாததால் ஆட்டோ தொழிலில் ஆர்வம் இருந்தும் கூட பல பெண்கள் பயிற்சி பெறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். 

எனவே அரசு பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி மையம் ஏற்படுத்திக் கொடுக்கும்பட்சத்தில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு முன் வருவார்கள். மேலும் அதிக பெண்கள் ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் ஈடுபடும்போது சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். மேலும் பெண்கள் தொழில் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.

எனவே, புதுவை அரசு, புதுச்சேரி மகளிருடைய சமுக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் அறிவுறதலின்படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், புதுச்சேரி மகளிருக்கான பிரத்யேகமாக இலவச மூன்று சக்கர மின்சார வாகன ஓட்டுநர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடு புதுவை போக்குவரத்து துறையால் நடைபெற்று வருகிறது. 

இலசை பயிற்சி வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரியம் பெறுவதற்கும் வகை செய்யப்படும். உரிமங்கள் பெறுவதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத் தொகையை மட்டும் அவர்கள் செலுத்த நேரிடும். இதன் மூலம் பெறப்படும் ஓட்டுனர் உரிமம் அனைத்து மூன்று சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். 

இதனால் புதுவை மகளிரின் பொருளாதாரம் மேம்படும். எனவே, விருப்பமுள்ள புதுச்சேரி மகளிர் The PRINCIPAL., MVDTI, GOVERNMENT AUTOMOBILE WORKSHOP SARAM, PUDUCHERRY AND REGIONAL TRANSPORT OFFICER, KARAIKAL ஆகிய முகவரிக்கு பிப்ரவரி 6ம் தேதி தேதியிலிருந்து பிப்ரவரி 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தகவலை Dr.A.S. சிவக்குமார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி