Madurai Transport Change : மதுரை மக்கள் கவனத்திற்கு.. அதிமுக மாநாடு காரணமாக நாளை போக்குவரத்து மாற்றம்!
Aug 19, 2023, 05:02 PM IST
மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாடு காரணமாக மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் எந்தெந்த வழியாக வரலாம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், நாளை மதுரை மாவட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகம், வலையங்குளம் கருப்புச்சாமி கோவில் அருகில் மாநாடு நடைபெறவுள்ளது.
போக்குவரத்தை சீர்செய்யும் வகையில், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்காணும் மாற்று பாதை வழியாக பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள்
1. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகரிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி செல்ல வேண்டும்.
2. தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி மற்றும் சென்னை செல்வதற்கு எட்டயபுரம் வழியாக கோவில்பட்டி சென்று விருதுநகர், திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும்.
3. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல், வாடிப்பட்டி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.
4. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக தூத்துகுடி செல்லும் வாகனங்கள், மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.
5. இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தூத்துக்குடி மற்றும் விருதுநகர் செல்லும் வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.
6. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து மதுரை மார்க்கமாக இராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் மேலூரிலிருந்து சிவகங்கை வழியாக செல்ல வேண்டும்.
7. தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக திருச்சி செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும்.
B. தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் வாகனங்கள், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து துவரிமான், நகரி, தனிச்சியம், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மேலூர் மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்ல வேண்டும்.
9. திண்டுக்கல்லிலிருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நத்தம், கொட்டாம்பட்டி, திருப்பத்தூர் வழியாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்ல வேண்டும்.
10.இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் சிவகங்கையிலிருந்து மேலூர், அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லூர், தனிச்சியம், நகரி, துவரிமான், நாகமலை புதுக்கோட்டை வழியாக தேனி செல்ல வேண்டும்.
11.மதுரை நகர்ப் பகுதியில் இருந்து விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து காளவாசல், துவரிமான், கப்பலூர், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.
கட்சியினர் வாகனங்கள்
1. மாநாட்டிற்கு வருக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் போக்குவரத்து நெறிசலை குறைக்கும் பொருட்டு மதுரை மாநகருக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். 2. திருச்சி, மேலூர் மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் மதுரை
மாநகருக்குள் செல்லாமல் நான்குவழிச் சாலையில் சென்று மண்டேலா நகர் வழியாக மாநாடு இடத்திற்கு செல்ல வேண்டும்.
3. திண்டுக்கல், வாடிப்பட்டி மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் தனிச்சியம், துவரிமான் வழியாக கப்பலூர் சென்று மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
4. தேனி, உசிலம்பட்டி மார்க்கமாக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சியினர் வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து தோப்பூர், கப்பலூர் வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
தனியார் இலகு ரக வாகனங்கள்
1. திருச்சியிலிருந்து சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி செல்லும் இலகுரக வாகனங்கள் ராம்நாடு சுற்றுச்சாலை, இராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
2. திருச்சியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி செல்லும் இலகுரக வாகனங்கள் ராம்நாடு சுற்றுச்சாலை, மதுரை மாநகர் தெப்பக்குளம் வழியாக திருப்பரங்குன்றம், திருநகர் சென்று கப்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
3. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் திருச்சியிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி செல்லும் இலகுரக வாகனங்கள் மேலூரிலிருந்து திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
4. மேற்சொன்ன வழித்தடங்களில் அதிகமான போக்குவரத்து நெறிசல் ஏற்படும்
சூழ்நிலையில், கனரக சரக்கு வாகனங்கள் செல்ல குறிப்பிடப்பட்டுள்ள மாற்று
வழித்தடங்கள் வழியாக தனியார் இலகு ரக வாகனங்கள் அனுப்பப்படும்.
விமான நிலையம் செல்லும் வாகனங்கள்
1. விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.
2. தூத்துக்குடியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் எட்டையபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், கப்பலூர், தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.
3. திருச்சி மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை, மதுரை மாநகர், மாட்டுத்தாவணி வழியாக தெற்குவாசல், அவனியாபுரம் சென்று விமான நிலையம் செல்ல வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.