தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tnpsc தேர்வில் குழப்பம் எதிரொலி! தேர்வு நேரம் மாலை 5.30 மணி வரை நீட்டிப்பு!

TNPSC தேர்வில் குழப்பம் எதிரொலி! தேர்வு நேரம் மாலை 5.30 மணி வரை நீட்டிப்பு!

Kathiravan V HT Tamil

Feb 25, 2023, 12:48 PM IST

மதிய தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைஎப்றும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகர் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
மதிய தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைஎப்றும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகர் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

மதிய தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைஎப்றும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகர் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள 5,446 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் கடந்த மே 21ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகளை கடந்த நவம்பர் 8 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளிட்டது. அதன்படி முதல் நிலை தேர்வில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

இவர்களில் 55,071 பட்டதாரிகள் அடுத்த கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு - கோப்புப்படம்

காலையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும், மதியத்தில் பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் காலையில் நடைபெற்ற தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு சரியான நேரத்தில் துவங்கவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

பல இடங்களில் குழப்பம்

சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல மைங்களிலும் இதே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் தேர்வு எழுத காலையில் சுமார் 2000 மாணவர்கள் வந்திருந்தனர். காலை ஒன்பரை மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு தாமதமாக துவங்கியது. தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு எழுதும் அறை முறையாக ஒதுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு அங்கு எழுந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து தேர்வரகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குழப்பம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

தேர்வு நேரம் நீட்டிப்பு

இந்த நிலையில் பிற்பகல் தேர்வு நேரத்தை நீட்டித்து புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது அதில், வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவென்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தை ஈடு செயௌம் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நடைஎப்றும் என தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகர் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி