தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Medical Counsellling : முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

TN Medical Counsellling : முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

Priyadarshini R HT Tamil

Aug 07, 2023, 05:46 AM IST

TN Medical Counselling : முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
TN Medical Counselling : முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

TN Medical Counselling : முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இந்திய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) இதை நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு என்று ஒதுக்கப்படுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துகிறது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2023-24ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்றது. பரிசீலனைக்குப் பின்னர், எம்டி, எம்எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தரவரிசைப் பட்டியல் - எம்டிஎஸ் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு https://www.tnhealth.tn.gov.in/ , https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் இன்று தொடங்குகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி