தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Medical Admission : மருத்துவ மாணவர் சேர்க்கை – நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

TN Medical Admission : மருத்துவ மாணவர் சேர்க்கை – நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Priyadarshini R HT Tamil

Jun 27, 2023, 01:07 PM IST

இந்த மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (28.06.2023) முதல் ஜூலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (28.06.2023) முதல் ஜூலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (28.06.2023) முதல் ஜூலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.03 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர்.

தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை - 8,03,385. இதில் மாணவிகள் 4,21,013 பேர், மாணவர்கள் 3,82,371 பேர் ஆவர். தேர்ச்சிப் பெற்றவர்கள் 7,55,451 (94.03 சதவீதம்) ஆகும்.

இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவீதம் பேர், மாணவர்கள் 91.45 சதவீதமும் பதிவாகியிருந்தது. மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது. பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இனி கவுனிசிலிங் விரைவில் அறிவிக்கப்படும்.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தமிழகம் முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர். இது 54 சதவீத தேர்ச்சியாகும். 

மேலும் தோல்வியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 68,823 ஆகும். எனவே 2023-2024ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் கூறியுள்ளது.

இந்த மருத்துவப் படிப்புகளுக்கு நாளை(28.06.2023) முதல் ஜூலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க www.tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உள்ள மாணவ, மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கூறப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் முடிவடைந்த பிறகு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதல் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி