தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thiruma About Bjp Alliance: ’பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்!’ சந்தேகம் கிளப்பும் திருமா! ஒருவேளை இருக்குமோ…?

Thiruma About BJP Alliance: ’பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்!’ சந்தேகம் கிளப்பும் திருமா! ஒருவேளை இருக்குமோ…?

Kathiravan V HT Tamil

Sep 18, 2023, 03:01 PM IST

”இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் கட்டாயம் மக்களிடையே வரவேற்பு இருக்கும்”
”இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் கட்டாயம் மக்களிடையே வரவேற்பு இருக்கும்”

”இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் கட்டாயம் மக்களிடையே வரவேற்பு இருக்கும்”

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடாக பேசி வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

கூட்டணி நல்லிணக்கத்திற்கு எதிராக அவருடைய பேச்சு நடவடிக்கைகள் அனைத்தும் இருக்கின்றன. இவ்வுளவு பேசிய பிறகும் அதிமுக அக்கூட்டணியில் இருக்கலாமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுதுள்ளது.

பேரறிஞர் அண்ணா அவர்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வேண்டும் என்றே அண்ணாதுரை என்று அழைப்பது மிகுந்த அவமதிப்பாகும். இந்த நிலையில் அதிமுக தன்மானத்தோடு ஒரு முடிவை எடுத்துள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் கட்டாயம் மக்களிடையே வரவேற்பு இருக்கும். அல்லது பாஜக தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காக சொல்லி இருந்தால் மேற்கொண்டு சமரசம் பேச வாய்ப்புள்ளது.

இது பாஜக தலைமையின் கவனத்தை ஈர்பதற்காக சொல்லப்பட்டதா? அல்லது அதிமுகவின் தன்மானத்தை தக்க வைப்பதற்காக சொல்லப்பட்டதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதனால் திமுக கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது என்பது எனது நம்பிக்கை.

அடுத்த செய்தி