தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suicide: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை! காரணம் இதுதான்!

Suicide: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை! காரணம் இதுதான்!

Mar 02, 2023, 12:41 PM IST

Madurai : புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி அரசு மருத்துவனையில் தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம்
Madurai : புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி அரசு மருத்துவனையில் தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம்

Madurai : புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி அரசு மருத்துவனையில் தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம்

மதுரை அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி இவருக்கு வயது 36. கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாய்ப்புண் ஏற்பட்டது. இதனால் ரவி பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றார். ஆனால் வாய்ப்புண் குணமாகவில்லை. இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவி கவலையுடன் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து ரவியை மேல் சிகிச்சைக்காக மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட ரவி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலில் ரவி, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். தொடர்ச்சியாக விரக்தியில் இருந்த ரவி இன்று அதிகாலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்றார். ஆனால் ரவி, நீண்ட நேரத்திற்கு பின்னரும் ரவி வார்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது ரவி கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

டாபிக்ஸ்

அடுத்த செய்தி