தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Southern Railway: தென்மாவட்டம் செல்லும் முக்கிய ரயில்கள் நேரம் மாற்றம்! சில ரயில்கள் ரத்து - முழு விவரம் இதோ

Southern Railway: தென்மாவட்டம் செல்லும் முக்கிய ரயில்கள் நேரம் மாற்றம்! சில ரயில்கள் ரத்து - முழு விவரம் இதோ

Jul 26, 2023, 09:03 AM IST

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வைகை, பல்லவன் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் நேரம் மாற்றும், ரத்தும் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வைகை, பல்லவன் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் நேரம் மாற்றும், ரத்தும் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வைகை, பல்லவன் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் நேரம் மாற்றும், ரத்தும் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் (வண்டி எண்: 12636) ஆகஸ்ட்1ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் இரு மார்க்கமாக ஜூலை 30,31 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல் இடையே இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 1வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் (வண்டி எண் 16352) ஜூலை 30ஆம் தேதி திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்.

ஸ்ரீ மாத வைஷ்ணவி தேவி காட்ரா - திருநெல்வேலி விரைவு ரயில் (வண்டி எண் 16788) ஜூலை 27, 30 தேதிகளில் கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் ஜூலை 30ஆம் தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், ஆகஸ்ட் 1ஆம் தேதி விருதாச்சலம், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் - திருச்சி இடையிலான ராக்போர்ட் விரைவு ரயில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், சோழன் விரைவு ரயில் ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பொன்மலையுடன் நிறுத்தப்படுகிறது. இந்த தேதிகளில் சோழன் ரயில் பொன்மலையில் இருந்து 10.25க்கு புறப்பட்டு சென்னை சென்றடையும்.

திருச்சி - அகமதாபாத் செல்லும் விரைவு ரயில் ஜூலை 30ஆம் தேதி, மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் விரைவு ரயில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொன்மலையிவ் இருந்து புறப்பட்டு செல்லும்.

கச்சிகுடா - மதுரை விரைவு ரயில் ஜூலை 31ஆம் தேதி விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். இதே நாளில் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும்.

கவுராவில் இருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரயில் ஜூலை 30இல் பொன்மலையுடன் நிறுத்தப்படும். பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொன்மலையில் இருந்து 1.45 மணிக்கு புறப்படும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி