தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Theni Crime: சிறுமியைச் சீண்டிய பெட்டி கடைக்காரர் - தண்டனை விதித்த நீதிமன்றம்

Theni Crime: சிறுமியைச் சீண்டிய பெட்டி கடைக்காரர் - தண்டனை விதித்த நீதிமன்றம்

Aug 06, 2023, 07:23 AM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அவர்களைக் கொடூரமாகக் கையாளும் விதம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாக அமைகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

இதனை தடுப்பதற்குக் கடுமையான தண்டனைகள் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அவர்களை மோசமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் உச்சத்தில் இருந்து வருகின்றன.

குறிப்பாகச் சிறுமிகள் பாலியல் ரீதியான தொல்லைகளில் அதிகம் சிக்கி வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பாகம் புலித் தெருவைச் சேர்ந்தவர் ரஹீம். 53 வயதான இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ரஹீம் இடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் ரஹீமை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தன. வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிந்ததைத் தொடர்ந்து நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ரஹீமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதைக்கப்படுகிறது. ஒருவேளை அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார்.

இதனை அடுத்து காவல்துறையினர் ரஹீமைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மாவட்டம் மத்தியச் சிறையில் அடைத்தனர். பெட்டிக்கடை நடத்தி வரும் முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி