தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: செந்தில் பாலாஜி மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Senthil Balaji: செந்தில் பாலாஜி மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Feb 28, 2024, 11:18 AM IST

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று மீண்டும் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

முன்னதாக சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த14, 15 மற்றும் 21-ஆம் தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்கள், முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உண்மை என விளக்கினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் வழக்கை 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்கவும் ஆணையிட்டு உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 5 முறை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் 2 வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சுமார் 230 நாள்களாக சென்னை புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை 19 முறையாக நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு அமலாக்க துறையினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும், செந்தில் பாலாஜியின் நண்பர் நடத்தும் உணவகத்திலும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன்பின்னர் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி