தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Courtallam Updates: ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. இன்றைய குற்றாலம் சீசன் நிலவரம் இதோ..!

Courtallam Updates: ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. இன்றைய குற்றாலம் சீசன் நிலவரம் இதோ..!

Karthikeyan S HT Tamil

Jul 19, 2023, 11:41 AM IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் களைகட்டி காணப்படும். சீசன் காலங்களில் இங்குள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுப்பது வழக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

அந்தவகையில் இந்தாண்டு சீசன் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றாலும் தற்போது குற்றாலத்தில் குளுமையான சூழல் நிலவி வருகிறது. வார விடுமுறை தினங்களில் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் அருவிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசைகளில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஒருவாரமாக வெயில் அடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

நீர்வரத்து சீராக இருப்பதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் செல்கின்றனர். 

வெண்ணமடை படகு குழாமில் தண்ணீர் குறைந்து காணப்பட்டாலும் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வப்போது சாரல் மழையும் விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளிர்ந்த காற்று வீசுவதோடு, இதமான வெயிலும் அடிப்பதால் இன்றைக்கு குற்றால சீசன் களைகட்டியுள்ளது.

குற்றால சீசன் நிலவரம் - 19.07.2023

மெயின் அருவு - மிதமான நீர்வரத்து

ஐந்தருவி - மிதமான நீர்வரத்து

பழைய குற்றால அருவி - மிகக்குறைவான நீர்வரத்து

புலியருவி - மிகக்குறைவான நீர்வரத்து

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி