தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : ’டீச்சர் என்னை தவறாக நினைத்து திட்டிட்டாங்க’ சிக்கிய உருக்கமான கடிதம்.. 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Crime : ’டீச்சர் என்னை தவறாக நினைத்து திட்டிட்டாங்க’ சிக்கிய உருக்கமான கடிதம்.. 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Divya Sekar HT Tamil

Sep 17, 2023, 07:48 AM IST

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரின் மனைவி கற்பகம். இந்த தம்பதியின் மகன் அஜய் (15). இவர் சிகே மங்கலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

கடந்த 15 ஆம் தேதி வழக்கம் போல் கற்பகம் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த அஜய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு அடைக்கப்பட்டிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த கற்பகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகனின் சடலத்தை பார்த்து கதறி துடித்தார்.

பின்னர் மாணவர் அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதில் ‘சக மாணவியோடு பேசியதை ஜூலி டீச்சர் என்னை தவறாக நினைத்து கண்டித்தார். எனக்கு இவ்வுலகில் வாழப் பிடிக்கவில்லை. இதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்’என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அஜயின் உறவினர்கள் பள்ளி ஆசிரியை ஜூலி என்பவர் திட்டியதால் தான் அஜய் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்வதாக உறுதியளித்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி