தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பட்டதாரியின் கன்னியாகுமரி – காஷ்மீர் மாட்டுவண்டி பயணம்: எதுக்குன்னு தெரியுமா?

பட்டதாரியின் கன்னியாகுமரி – காஷ்மீர் மாட்டுவண்டி பயணம்: எதுக்குன்னு தெரியுமா?

Priyadarshini R HT Tamil

Jan 29, 2023, 10:59 AM IST

Farmer Creating Awareness : விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், நாட்டு இன மாடுகளை பாதுகாக்க வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்து இளைஞர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மாட்டுவண்டியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திர சூரியன்(35), பட்டப்படிப்பு படித்திருந்தபோதும், விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சொந்த ஊரிலேயே கடந்த 10 ஆண்டுகளாக 4 ஏக்கர் நிலத்தில் பருத்தி, கத்திரி, கரும்பு, நெல் என மாற்று விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

இளைய தலைமுறை விவசாயத்தில் ஈடுபட வேண்டும், விளை பொருள்களுக்கு உரிய விலையை ஒன்றிய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றைமாடு பூட்டிய மாட்டுவண்டியில் பயணத்தைதுவக்கி உள்ளார். 

இவர் கூறுகையில், “கடந்த 1ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டுவண்டி பயணத்தை துவக்கி, 3,600 கிமீ மாட்டு வண்டியில் பயணம் செய்து காஷ்மீரை 8 மாதங்களில் சென்றடைய முடிவு செய்துள்ளேன்“. கன்னியாகுமரியிலிருந்து பயணத்தை துவங்கிய அவர் நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். 

“இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தை மறந்து படிப்பிற்காக வேலை தேடி அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று அடிமையாக வேலை செய்கின்றனர். இளைய தலைமுறையினர் விவசாயம் செய்ய கற்றுக்கொண்டு விவசாயம் செய்தால் முன்னேறலாம். வேளாண் விளை பொருட்களுக்கு போதிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும். அழிந்து வரும் நாட்டு இன மாடுகளை காக்க வேண்டும். மாடுகள் அழிவால் இயற்கை உரங்கள் குறைந்து ரசாயன உரங்களை நம் மண்ணை கடுமையாக அழித்துவிட்டன. என் பயணம் முழுவதிலும் இவை குறித்தெல்லாம் விழிப்புண்ர்வு ஏற்படுத்தி வருகிறேன்“ என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி