தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Airport:சென்னை விமான நிலையத்தில் 5 ஸ்கீரின்கள் கொண்ட திரையரங்கு திறப்பு

Chennai Airport:சென்னை விமான நிலையத்தில் 5 ஸ்கீரின்கள் கொண்ட திரையரங்கு திறப்பு

Feb 02, 2023, 02:19 PM IST

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்குக்காக 5 ஸ்கீரின்கள் கொண்ட திரையரங்குகள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்குக்காக 5 ஸ்கீரின்கள் கொண்ட திரையரங்குகள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்குக்காக 5 ஸ்கீரின்கள் கொண்ட திரையரங்குகள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், திரையரங்கம், ஹோட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

இதில் விமான நிலையத்தில் முன்கூட்டியே வருகை தரும் பயணிகள், தங்களது அடுத்த இணைப்பு விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு 5 ஸ்கீரின்கள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டது.

1155 சீட்கள் கொண்ட இந்த திரையரங்கு, 2K RGB+Laser Projectors, Digital streoscopic projection, advanced Atmos high definition immersive audio போன்ற லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்த திரையரங்கம் திறப்பு மூலம் சென்னையில் மட்டும் பிவிஆர் ஸ்கீரின்களின் எண்ணிக்கை 77 என உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்த 88 பிவிஆர் ஸ்கீரின்கள் உள்ளன.

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறவினர், நண்பர்கள் அழைக்க வருபவர்கள், அல்லது ஊருக்கு செல்லும் முன் படம் பார்க்க விரும்புகிறவர்கள் இங்குள்ள திரையரங்கில் படம் பார்த்து செல்வதற்கு நல்ல வசதியாக இந்த திரையரங்குகள் அமைந்துள்ளது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் இணைப்பு பாலம் வழியாக இந்த திரையரங்கை அடையலாம். இந்த திரையரங்க திறப்பு நிகழ்வில் நடிகர்கள் சதீஷ், ஆனந்தராஜ், கூல் சுரேஷ் உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விமான போக்குவரத்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்பை விட தற்போது அதிகரித்துள்ள நிலையில், விமான நிலையங்களில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் கூட்டமான சற்று அதிகரித்தே காணப்படுகிறது. சில சமயங்களில் விமானம் புறப்பாடில் தாமதம் அல்லது வந்து சேருவதில் தாமதம் இருப்பதில் சில மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் உருவாகும்.

அந்த காத்திருப்பு நேரத்தை வீணாக கழிக்காமல் பொதுமக்களின் பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு இந்த திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்கள் தங்களது பயணத்தையும், திரைப்படம் பார்க்கும் திட்டத்தை ஒரு சேர திட்டமிட்டு கொள்ளலாம். 

அடுத்த செய்தி