தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Premalatha Interview: தேர்தலில் யாருடன் கூட்டணி? – பிரேமலதா பேட்டி

Premalatha Interview: தேர்தலில் யாருடன் கூட்டணி? – பிரேமலதா பேட்டி

Priyadarshini R HT Tamil

Feb 10, 2023, 12:20 PM IST

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலமைச்சருக்கு கடலில் பேனா என்பது தேவையில்லாத ஒன்று. கேப்டன் மெரினா பீச்சிலே விழா எடுத்து கலைஞருக்கு தங்கப்பேனாவை பரிசளித்திருக்கிறார். மீண்டும் எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்பது தேமுதிகவின் நிலைப்பாடு. 

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

அந்தப்பணத்தை கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை வசதிகள் என்று நாட்டுக்கு செய்யக்கூடிய ஏராளமான நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஆளுங்கட்சியினர் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளுக்காக அந்தப்பணத்தை செலவழிக்க வேண்டும். எனவே பேனா சிலை என்பதும், அதுவும் கடலில் என்பதும் தேவையில்லாத ஒன்று என்பது தேமுதிகவின் நிலைப்பாடு. 

எங்கள் கட்சியின் கொள்கையோடு நிறைய பேர் ஒத்திருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் அதிமுகவோடு கூட்டணி வைத்தோம். கருத்துவேறுபாடு காரணமாக பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் வரும் தேர்தலில் கேப்டன் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்று தெரிவிக்கிறேன். 

அமைச்சர்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. அதைவிடுத்து அவர்கள் வேறு பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதை மக்கள் ஏற்கவில்லை. மிகக்குறுகிய காலத்தில் ஆளுங்கட்சியின் மீது ஒரு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாராட்டும் வகையில் ஒன்றுமில்லை. திருச்சியில் கூட மாநகராட்சிபோல் ஒரு தெருவும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஆட்சியில் பாராட்டும் வகையில் ஒன்றும் இல்லை. இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. குறுகிய காலத்திலே மக்களிடம் கெட்ட பெயர் எடுத்துள்ளார்கள். 

ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவுகள் வரும்போது, தேமுதிகவின் பலம் என்ன என்பதை நாங்கள் உணர்த்துவோம். தமிழகம் முழுவதும் தேமுதிக பலமாக உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி