தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வரதட்சணை கேட்டு மிரட்டல் .. மருமகள் பரபரப்பு புகார்.. பாமக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

வரதட்சணை கேட்டு மிரட்டல் .. மருமகள் பரபரப்பு புகார்.. பாமக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

Karthikeyan S HT Tamil

Aug 22, 2023, 01:05 PM IST

மருமகளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக சேலம், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருமகளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக சேலம், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருமகளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக சேலம், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சதாசிவம் மீது குடும்பத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: மிரட்ட காத்திருக்கும் கனமழை..இந்த 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

தற்போது தம்பதிக்கு ஒன்றைரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் மனோலியா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

புகாரின்பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பு முன்ஜாமீன் பெறுவதற்காக நடவடிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சதாசிவம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிற்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். பாமகவை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சதாசிவம் மீது குடும்பத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி