தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rowdy Encounter : 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்தது ஏன்? - காவல் ஆணையர் விளக்கம்!

Rowdy Encounter : 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்தது ஏன்? - காவல் ஆணையர் விளக்கம்!

Divya Sekar HT Tamil

Oct 12, 2023, 12:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூர் மாரம்பேடு பகுதியில் நடந்த என்கவுண்டரில் ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூர் மாரம்பேடு பகுதியில் நடந்த என்கவுண்டரில் ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூர் மாரம்பேடு பகுதியில் நடந்த என்கவுண்டரில் ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணன், சதீஷ் இருவரும் தில்லியில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னை அழைத்து வரப்பட்ட முத்து சரவணன் மற்றும் சதீஷ் இருவரையும் காவலர்கள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்களை தாக்கி விட்டு முத்து சரவணன் தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

இதனால் காவல்துறையினர் தற்காப்புக்காக முத்து சரவணனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சரணவனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுண்டரின் போது காயம் அடைந்த மற்றொரு ரவுடி சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் மற்றும் சதீஷ் தாக்கியதில் 3 காவலர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திருவள்ளூர் சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆவடி காவல் ஆணையர் சங்கர் என்கவுன்டர் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளும் பிரபல ரவுடிகளுமான முத்து சரவணன் சண்டே சதீஷ் ஆகியோர் தலைமறைவாக இருந்த தகவல் கிடைக்கப்பெற்று அவர்களை கைது செய்வதற்காக இன்று காலை தனிப்படை சென்றது.

அப்போது ரவுடிகள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் மூன்று காவலர்களுல்கு காயம் ஏற்பட்டது. போலீசார் தற்காப்புக்கு சுட்டதில் இரண்டு ரவுடிகளும் கொல்லப்பட்டனர். அதிமுக பிரமுகர் பார்திபன் கொலை வழக்கில் வேறு யாரும் குற்றவாளிகள் வெளியில் இல்லை.

அவர்கள் எந்த ரக துப்பாக்கிய பயன்படுத்தினார்கள்? எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

முத்துசரவணன் 6 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 8 வழிப்பறி கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி இவர் சென்னை புறநகர பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் மற்றும வியாபாரிகளிம் மிரட்டி பணம் பறிப்பதும் கொலை செய்வதும் முக்கிய தொழிலாக இருந்துவந்துள்ளது. இவரது நெருங்கிய கூட்டாளியான ரவுடி சண்டே சதிஷ் என்பவர் மீது 5 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்கும், 4 வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி