தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vairamuthu Tweet: மணிப்பூர் சம்பவம்.. கவிஞர் வைரமுத்து உருக்கமான ட்வீட்!

Vairamuthu Tweet: மணிப்பூர் சம்பவம்.. கவிஞர் வைரமுத்து உருக்கமான ட்வீட்!

Karthikeyan S HT Tamil

Jul 20, 2023, 12:43 PM IST

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக ட்வீட் செய்திருக்கிறார்.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக ட்வீட் செய்திருக்கிறார்.

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக ட்வீட் செய்திருக்கிறார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு சிறுபான்மை சமூகமான குகி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்துக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

இதனிடையே குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்ற ரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மனிதகுலத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இதுகுறித்து தனது ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரது பதிவில், "தெய்வம் என்பார் பெண்களை;

தேவி என்பார் பூமியை;

கடவுளின் பாகம் என்பார்

பார்வதியை

நடைமுறையில்

உடல் உரிப்பு செய்து

ஊர்வலம் விடுவார்

நம் தலையில் அல்ல

காட்டுமிராண்டிகளின்

தலையில் அடிக்க வேண்டும்

அநியாயங்களை நிறுத்துங்கள்;

அதிகாரம் உள்ளவர்கள்

களமிறங்குங்கள்

இன்னும் மணிப்பூர்

இந்தியாவில்தான் இருக்கிறது." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி