தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எய்ம்ஸ் வரும் முன்பே முதல்வர் இதை எட்டிவிடுவார்- கவிஞர் வைரமுத்து பேச்சு

எய்ம்ஸ் வரும் முன்பே முதல்வர் இதை எட்டிவிடுவார்- கவிஞர் வைரமுத்து பேச்சு

Karthikeyan S HT Tamil

Jan 29, 2023, 01:17 PM IST

Poet Vairamuthu Talk about AIIMS: முதலில் கல்வி, பின்னர் மருத்துவம் இவ்விரண்டையும் கண்ணாக எண்ணி பணியாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
Poet Vairamuthu Talk about AIIMS: முதலில் கல்வி, பின்னர் மருத்துவம் இவ்விரண்டையும் கண்ணாக எண்ணி பணியாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

Poet Vairamuthu Talk about AIIMS: முதலில் கல்வி, பின்னர் மருத்துவம் இவ்விரண்டையும் கண்ணாக எண்ணி பணியாற்றி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தமிழக காது, மூக்கு, தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

இந்த விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, எய்ம்ஸ் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது..எய்ம்ஸ் வருவதற்கு முன்பே, தனது AIM-ஐ முதலமைச்சர் எட்டிவிடுவார்" என்று தெரிவித்தார்.

மேலும், கவிஞர் வைரமுத்து பேசியது: நமது மொத்த ஜிடிபியில் 2-3 சதவீதம் மட்டுமே மருத்துவத்துக்கு செலவிடுவதாக சொல்கிறார்கள். நாம் எவ்வளவு ஜிடிபி யிலிருந்து எவ்வளவு அதிகம் செலவிடுகிறோமோ அந்த அளவுக்கு மருத்துவம் வளரும். முதல்வர் இந்த விழாவுக்கு வந்திருப்பது எவ்வளவு பொருத்தம் என்று யோசித்து பாருங்கள். அவருடைய சாதனைகளில் முன்னுரிமை பெறுவது இரண்டு என்று நான் கருதுகிறேன். 

முதலில் கல்வி பிறகு மருத்துவம். இந்த மருத்துவத்தை அவர் தன் ஒரு கண்ணாகவும் கல்வியை மற்றொரு கண்ணாகவும் கொண்டு முதல்வர் இயங்கிக் கொண்டிருக்கிறார். பன்னோக்கு மருத்துவமனை என்ற ஒன்றை இரவு பகலாக அவர் எண்ணிக்கொண்டு விரைவில் அதை செயலுக்கு கொண்டுவந்து இந்த மண்ணுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஆனால், தேவை என்பது ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர். எய்ம்ஸ் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த எய்ம்ஸ் வருவதற்கு முன்பே முதல்வர் தனது AIM- ஐ எட்டிவிடுவார் என்று தோன்றுகிறது. அது தான் கட்டப்பட்டு வரும் இந்த பன்னோக்கு மருத்துவமனை. 

முதலமைச்சராக அவர் பதவியேற்ற போது அவரை வரவேற்றது வளங்கள் அல்ல.. இயற்கை அல்ல..அவருக்கு பக்க துணையாக இருந்ததெல்லாம் நோயும், பற்றாக்குறையும் தான். இலவு காத்த கிளி போல தான் முதல்வர். ஆனால், அவருக்கு பஞ்சை எடுத்து தலையணை செய்யும் தந்திரம் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்த போது, கொரோனாவை அப்படி தான் எதிர்கொண்டார். மருத்துவர்களான உங்களுக்கும் நோயாளிகளுக்குமான இடைவெளியை தமிழை கொண்டு குறையுங்கள். நோயாளிகளின் நோய் மட்டுமல்ல அறியாமையையும் களைய வேண்டும்." என்று பேசினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி