தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss: கார்ல் மார்க்ஸின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை - ராமதாஸ்

Ramadoss: கார்ல் மார்க்ஸின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை - ராமதாஸ்

Karthikeyan S HT Tamil

Feb 24, 2023, 12:35 PM IST

Ramadoss Condemns Governor: கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Ramadoss Condemns Governor: கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Ramadoss Condemns Governor: கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன!

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்ஸின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர்.

கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது, அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்ஸ் குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனை சிதறல்கள் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கம்யூனிஸ்ட் சிந்தனையாளரான காரல் மார்க்ஸின் சிந்தனைகள், இந்தியாவை சிதைத்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. பாஜக தலைவர்கள் கூட பேசத் தயங்கும் கொள்கை சார்ந்த விஷயங்களை ஆளுநர் ரவி அனைத்து இடங்களிலும் பேசி வருவதாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி