தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anbumani: 'சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிடுங்க' - அன்புமணி காட்டம்!

Anbumani: 'சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிடுங்க' - அன்புமணி காட்டம்!

Karthikeyan S HT Tamil

Dec 22, 2023, 02:02 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத அளவுக்கு அதிகன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் குடிநீர், உணவின்றி தத்தளித்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

Weather Update: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! வெளுக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இதையடுத்து அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் இன்று நேரில் சென்று வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தாா்.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது: இதுபோன்ற கனமழையை பார்த்ததில்லை என தென் மாவட்ட மக்கள் சொல்கிறார்கள். அரசு அதிகாரிகள் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீரை திறந்துவிட்டனர். அறிவித்ததை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற இயற்கை சீற்றங்கள், பருவநிலை மாற்றத்தால் இனி அடிக்கடி வரும் என பலமுறை எச்சரித்துள்ளேன். மீண்டும் இதேபோல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு முறையாக திட்டமிட வேண்டும்.

மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு? சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம், அது தேவையில்லை, வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை 5 ஆம் வகுப்பு மாணவன் செய்வான்; சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனதான் எப்போதும் அறிவிக்கிறார்கள். சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனதான் எப்போதும் அறிவிக்கிறாா்கள்; இது எங்களுக்கு தெரியாதா? உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிவருகிறது; இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது." என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி