தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore:'பீகார், ஜார்க்கண்ட் மக்கள் பயத்தில் உள்ளனர்' சைலேந்திரபாபு பேட்டி

Coimbatore:'பீகார், ஜார்க்கண்ட் மக்கள் பயத்தில் உள்ளனர்' சைலேந்திரபாபு பேட்டி

Mar 09, 2023, 01:25 PM IST

பீகார்,ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு பயந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
பீகார்,ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு பயந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பீகார்,ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு பயந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து தொழில்துறையினருடன் டிஜிபி சைலேந்திர ஆலோசித்து வருகிறார். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் மேற்கு மண்டல காவல் துறையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்,

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

டிஐஜி ஆகியாரும் கூட்டத்தில் பங்கேற்பு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கோவை சரகத்தில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அதிபர்களுடன் சந்தித்தோம். அப்போது புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்குதல் குறித்த வதந்திகளால் ஏற்பட்ட குழப்பம் சரியான முறையில் கையாண்டதற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நிலைமை சரியாக இருக்கிறது.

ஆலோசனை கூட்டத்தில் சைலேந்திர பாபு

மேலும் தொடர்ந்து தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போபால்,பாட்னா உட்பட பல இடங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாடல் வைத்து கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

பீகார்,ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு பயந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வைரல் வீடியோ தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோலிபண்டிகைக்கு சென்ற தொழிலாளர்கள் 15 நாட்களில் திரும்ப வாய்ப்புள்ளது.

போலீசார் களநிலவரத்துக்கு ஏற்றபடி பிரச்சனைகளை டீல் பண்ணுவார்கள். சில நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் லத்தியை பயன்படுத்துவார்கள். சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் கூகுள் பே வில் உங்கள் கணக்கில் தொகையை போட்டு விட்டு, பின் லிங்க் அனுப்பி திருப்பி அனுப்ப சொல்லுவார்கள். அப்படி லிங்க் அனுப்பினால், அதில் சில தகவல் கேட்கும். அப்படி தகவலை தெரிவித்து விட்டால் உங்கள் கணக்கில் இருந்து முழு பணத்தையும் திருடி விடுவார்கள். அப்படி ஏதாவது லிங்க் வந்தால் அந்த எண்ணை பிளாக் பண்ணிவிட்டு, காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

வீட்டை உடைத்து திருடுவதில்லை. வங்கி கணக்கினை சீசனுக்கு ஏற்றபடி திருடுகின்றனர். ஒடிபி வங்கி கணக்கு எண்ணை வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள். இதனால் ஓடிபி எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி