தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Karthigai Deepam:கார்த்திகை தீபம்-பழனியில் குவிந்த பக்தர்கள்;பாதை மாற்றம்

Palani Karthigai Deepam:கார்த்திகை தீபம்-பழனியில் குவிந்த பக்தர்கள்;பாதை மாற்றம்

Divya Sekar HT Tamil

Dec 06, 2022, 11:19 AM IST

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகையால் மலைக் கோயிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகையால் மலைக் கோயிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகையால் மலைக் கோயிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படவுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பழனி கோயிலில் அதிகரித்துள்ளது. திருக்கார்த்திகை முன்னிட்டு பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோயிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் ஒவ்வொரு படிகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியபடியே மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தந்துள்ளதால் பக்தர்கள்‌ நலன்கருதி, பக்தர்கள் மேலே செல்வதற்கு குடமுழுக்கு நினைவிருக்கும் வழியாகவும்,தரிசனம் முடித்து கீழே இறங்கும்போது படிப்பாதை வழியாக அடிவாரத்திற்கு வரும் வகையிலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப் படுகின்றனர். பக்தர்கள் வருகையை ஒட்டி பழனி கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி