தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nanguneri Incident: நடுங்கவைத்த நாங்குநேரி சம்பவம்; மேலும் ஒரு சிறுவன் கைது!

Nanguneri Incident: நடுங்கவைத்த நாங்குநேரி சம்பவம்; மேலும் ஒரு சிறுவன் கைது!

Karthikeyan S HT Tamil

Aug 12, 2023, 10:03 AM IST

நாங்குநேரியின் அண்ணன், தங்கை வெட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாங்குநேரியின் அண்ணன், தங்கை வெட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாங்குநேரியின் அண்ணன், தங்கை வெட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து வெட்டிய வழக்கில் ஏற்கனவே 6 சிறுவர்கள் கைதான நிலையில் மேலும் ஒரு முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

மக்களே உஷார்.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்ட போகுதாம்!

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் சின்னதுரை வள்ளியூரிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியாக மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி இரவில் முனியாண்டி வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் சின்னதுரையை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொடூரமாக வெட்டியது. மேலும் அதனை தடுக்க முயன்ற அவரது தங்கை சந்திரா செல்விக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் மற்றும் இடை நின்ற மாணவர்கள் 2 பேர் உட்பட 6 பேரை நாங்குநேரி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலியிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தமிழம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முன்னாள் மாணவரை நான்குநேரி போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். இக்குற்றச் சம்பவத்தில் ஏற்கனவே 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதானவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி