தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nda Vs India: ’26 பெருசா, 38 பெருசா?’- செய்தியாளர்களுக்கு ஜெயக்குமார் கேள்வி

NDA vs INDIA: ’26 பெருசா, 38 பெருசா?’- செய்தியாளர்களுக்கு ஜெயக்குமார் கேள்வி

Kathiravan V HT Tamil

Jul 19, 2023, 05:14 PM IST

’அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்பது போல் முதலமைச்சரும் அமைச்சர்களும் பார்ப்பது எல்லாம் அமலாக்கத்துறை மீதே உள்ளது.
’அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்பது போல் முதலமைச்சரும் அமைச்சர்களும் பார்ப்பது எல்லாம் அமலாக்கத்துறை மீதே உள்ளது.

’அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்பது போல் முதலமைச்சரும் அமைச்சர்களும் பார்ப்பது எல்லாம் அமலாக்கத்துறை மீதே உள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடியா திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் சார்பில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

வியாபாரிகள், பொதுமக்கள் தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தும் நடவடிக்கை விடியா திமுக அரசில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளாட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாக உள்ளது.

கேள்வி:- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு அதிமுக என்ற பெயரில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதே?

நேற்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எந்த அளவுக்கு எடப்பாடியர் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதிமுக ஒரு மிகப்பெரிய சக்தி என்பதை இந்தியாவே உணர்ந்துள்ளது. நாம் அதைத்தான் பார்க்க வேண்டும். ரவீந்திரநாத்திற்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது.

கேள்வி:- 26 கட்சிகளின் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே

26 பெசுசா? 38 பெருசா?; நாங்கள்தான் பலம் வாய்ந்த கூட்டணி என்பதால் மகத்தான வெற்றியை இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் பெறும்.

கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை ஈடுபடும் என்பதால் அதற்கு தயாராக உள்ளோம் என முதலமைச்சர் கூறி உள்ளாரே?

’அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்பது போல் முதலமைச்சரும் அமைச்சர்களும் பார்ப்பது எல்லாம் அமலாக்கத்துறை மீதே உள்ளது. கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைக்கும் வேலைதான் தற்போது நடந்துள்ளது.

100 கோடி ரூபாய்க்கு இந்தோனேஷியாவில் பொன்முடி நிலக்கரி சுரங்கத்தில் முதலீடு செய்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி