தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ntk Vs Bjp: ’விரைவில் நாம் தமிழர் கட்சியினரை Nia கைது செய்யும்!’ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

NTK vs BJP: ’விரைவில் நாம் தமிழர் கட்சியினரை NIA கைது செய்யும்!’ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Kathiravan V HT Tamil

Feb 04, 2024, 02:51 PM IST

”NIA RAID: நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நமக்கு என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது”
”NIA RAID: நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நமக்கு என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது”

”NIA RAID: நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நமக்கு என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது”

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், தேசத்தின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது. தமிழ்நாடு காவல்துறையினர் கூட இதனை கண்காணிக்கவில்லை. 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

என்.ஐ.ஏ நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை கண்காணித்த பிறகே அவர்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய உள்ளனர். நாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதம் செய்பவர்களையும் என்.ஐ,ஏ என்ற தேசிய பாதுகாப்பு முகமை கண்காணிக்கும். 

நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை நமக்கு என்.ஐ.ஏ சோதனை காட்டுகிறது. பயங்கரவாதம், நாட்டின் ஒற்றுமையை சீர்க்குலைப்பவர்களை கண்காணிக்கும் அமைப்பாக என்.ஐ.ஏ உள்ளது. அந்த வேலையை அந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

என்.ஐ.ஏ சோதனை 

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏவால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அன்று சென்னை, கோவை, திருச்சி, தென்காசி, ராஜபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

திருச்சியை சேர்ந்த பிரபல யூடியூப்பரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீடு, திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள வீட்டிலும் சோதனைகள் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கத்தினரோடு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. 

நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்துகிறது என்றால், நான் பாஜகவின் பி டீம் இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த செய்தி