தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: சிறை கைதி மீது தாக்குதல்? - அதிரடி உத்தரவு போட்ட மதுரை ஐகோர்ட்

MHC: சிறை கைதி மீது தாக்குதல்? - அதிரடி உத்தரவு போட்ட மதுரை ஐகோர்ட்

Karthikeyan S HT Tamil

Mar 04, 2023, 12:45 PM IST

சிறை கைதி மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை மத்திய சிறை காவலர்கள் பாண்டியன் மற்றும் வசந்த கண்ணன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சிறை கைதி மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை மத்திய சிறை காவலர்கள் பாண்டியன் மற்றும் வசந்த கண்ணன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சிறை கைதி மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை மத்திய சிறை காவலர்கள் பாண்டியன் மற்றும் வசந்த கண்ணன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மத்திய சிறையில் இருக்கும் தனது மகன் மீது தாக்குதல் நடத்திய சிறை காவலர்கள் பாண்டியன் மற்றும் வசந்த கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாய் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! வெளுக்கும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Today Gold Rate : அடேங்கப்பா.. 54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த பேச்சியம்மன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது மகன் மகேஷ் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் சிறையில் இருக்கும் எனது மகனை பார்க்கச் சென்ற போது எனது மகன் மகேஷ் என்னிடம் சிறை அதிகாரிகள் பாண்டியன் மற்றும் வசந்த கண்ணன் ஆகியோர் தன்னை பலமாக தாக்கியதாகவும், இதனால் தனது உடம்பு முழுவதும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தன்னை தனி சிறையில் அடைத்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக நான் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மகன் மகேஷிற்கு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவரது காயங்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், எனது மகனை தனிச்சிறையில் இருந்து புது சிறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் . எனது மகனை தாக்கிய சிறைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் பிறப்பித்த உத்தரவில், "மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் மனுதாரரின் மகனை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் முன் ஆஜர்படுத்த வேண்டும். டீன் முன்னிலையில் மனுதாரர் மகனுக்கு உடல்நிலை பரிசோதனை செய்து மற்றும் காயங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி