தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar : சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு!

Savukku Shankar : சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு!

Divya Sekar HT Tamil

May 15, 2023, 02:33 PM IST

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.

பிரபல பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருக்கும் சவுக்கு சங்கர் பல்வேறு ஊடகங்கள், யூடியூப் பேட்டிகளில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை முன் வைக்கிறார். இதில் பெரும்பாலானவை சர்ச்சையான கருத்துகளாகவே இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியோரை கடுமையாக விமர்சித்து தனது கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

Weather Update : மக்களே தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை கொட்ட போகுது.. நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Today Gold Rate: நாளை அட்சய திருதியை .. இன்று தங்கம் விலை திடீர் குறைவு. . இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இதே போல மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த வழக்கில் சுமார் 4 மாதங்கள் வரை சிறையில் இருந்தார். அப்போது சவுக்கு சங்கர் மீது நிலுவையில் இருந்த வழக்குகளில் அவரை கைது செய்து திமுக அரசு மீண்டும் சிறையில் அடைத்தது. இதனையடுத்த சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் திமுக மீதான தனது விமர்சனங்களை தீவிரப்படுத்தினார்.

மேலும் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிதான் அடுத்த முதலமைச்சர், திமுகவை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். மஹாராஷ்டிரவால் ஷிண்டே போல் தமிழகத்தில் செந்தில் பாலாஜி என கூறியிருந்தார். மேலும் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாகவும், பணி நியமன ஆணைக்கு பல லட்சம் வசூலிப்பதாகவும் கூறியிருந்தார்.

கரூரில் பல கோடி மதிப்பிலான வீடு கட்டுவதாகவும் சவுக்கு சங்கர் பல்வேறு சமூக வலை தளத்தில் பேட்டி கொடுத்தார், டுவிட்டர் மூலமாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக 4 பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி 300 கோடி செலவில் ஒரு ஆடம்பர மாளிகை கட்டிக் கொண்டிருப்பதாக சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி நேற்று அவர் கட்டப்பட்டு கொண்டிருக்கும் அந்த வீட்டின் முன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார். அதில் கிரகப்பிரவேசத்துக்கு கூப்புட மாட்டன்னு நானே வந்து பாத்துட்டேன் செந்தில் பாலாஜி அண்ணே என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்த உண்மைக்கு புறம்பான தகவல்களை சவுக்கு சங்கர் பேசி வருவதாக அந்த வழக்கில் குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக தனது மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி