தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்’ ஆக்‌ஷனில் இறங்கும் அன்பில்!

’50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்’ ஆக்‌ஷனில் இறங்கும் அன்பில்!

Kathiravan V HT Tamil

Mar 16, 2023, 12:34 PM IST

”11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல்”
”11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல்”

”11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல்”

தமிழகத்தில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் 50674 பேர் தவிர்த்துள்ளனர். இச்சம்பவம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத வராமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் வரை பள்ளிக்கே செல்லாமல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில் தேர்வுகள் எழுதாமலேயே ஆல் பாஸ் செய்யப்பட்டனர். கொரோனா தொற்று படிபடியாக குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் இயல்பாக செயல்பட தொடங்கினாலும் பல மாணவர்களின் படிக்கும் வழக்கம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கவில்லை என அரசுத் தேர்வுகள் துறை இயக்க சார்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன. கொரோனா தொற்றுக்கு காலத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி பொதுத்தேர்வு மீதன அச்சம் போன்றவை மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வராதமல் போனதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் பொதுத்தேர்வில் பங்கேற்கவில்லை என்பது அரசுத் தேர்வுகள் துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வில் இத்தனை லட்சம் பேர் ஆப்செண்ட் ஆகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ‘மாணவர்கள் தேர்வுக்கு வராமல் போனதற்கான காரணம் குறித்து ஆராயப்படும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

தற்போது நடக்கும் 12 தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தேர்வுகளை 50, 674 பேர் புறக்கணித்துள்ளனர். தேர்வை புறக்கணித்த மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் மீண்டும் தேர்வு எழுத அவகாசம் வழங்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கல்வித்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாதது குறித்தும் 11ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி