தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc:மருத்துவ காப்பீடு திட்டம்: எளிதாக சென்றடையும் விதமாக வடிவமைக்க உத்தரவு

MHC:மருத்துவ காப்பீடு திட்டம்: எளிதாக சென்றடையும் விதமாக வடிவமைக்க உத்தரவு

Dec 20, 2022, 10:00 PM IST

அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியானவர்கள் எளிய முறையில் சேர்ந்து பயன் பெறும் வகையில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில், தவறு செய்யும் அரசு அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

ஏழை நோயாளிகள் உரிய மருத்துவ சிகிச்சை பெறவும், முறையான தரமான வழிகாட்டுதல்களை வகுத்து திறம்பட செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், "அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் குறித்து , வெளிப்படையாக, தெளிவாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரபடுத்தி அனைத்து தரப்பு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியான நபர்கள், எளிய முறையில் இலகுவாக சேர்ந்து பயன் பெறும் வகையில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி