தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

MHC: அம்மா சிமெண்ட் விநியோகத்தில் முறைகேடு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Jan 25, 2023, 01:07 PM IST

அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குந்தடம் பகுதியில் அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரி பாஜக நிர்வாகி யோகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

அவர் தனது மனுவில், "அம்மா சிமெண்ட் கிடங்கியில் ஆவணங்களின்படி இருக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையிலே இருந்துள்ளது தொடர்பாக புகார் அளித்தேன். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் மேற்கொண்ட ஆய்வில், இதை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த ஆய்வுக்கு பின்னர் போலி ஆவணங்கள் தயார் செய்து சிமெண்ட் மூட்டைகளுக்கான தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் ஒன்று செலுத்தியுள்ளது.

அந்த வகையில் 4, 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக அம்மா சிமெண்ட் கிடங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்த பணியாளர்களுக்கு எதிராக மட்டும் குந்தடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்களுக்கு எதிராக எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதரப்பில், "இந்த முறைகேடு தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குந்தடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இதுதொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என விளக்கம் அளிக்கப்பட்டது.

உரிய விசாரணைக்கு பிறகு வழக்கு தொடர்பாக மற்ற அலுவலர்கள் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அம்மா சிமெண்ட் விநியோகம் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து, மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி