தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Rowdy : மதுரையில் பரபரப்பு.. ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு!

Madurai Rowdy : மதுரையில் பரபரப்பு.. ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு!

Divya Sekar HT Tamil

Feb 28, 2023, 12:21 PM IST

மதுரையில் குற்றவாளியை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் குற்றவாளியை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் குற்றவாளியை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி மீது காலில் துப்பாக்கி சூடு - காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான குற்றவாளி வினோத் அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை: வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கினை, மதுரை மாட்டுத்தாவணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 5 பேரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரடியான உலகனேரியை சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்து, கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

மதுரை வண்டியூர் பகுதிக்கு வினோத்தை காவல்துறையினர் அழைத்துசென்று அடையாளம் காட்டியபோது, திடீரென அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலர் சரவணகுமாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ராஜாங்கம் ரவுடி வினோத்தின் வலது காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தார்.

இதனையடுத்து, காயமடைந்த ரவுடி வினோத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி