தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Karthikeyan S HT Tamil

Nov 03, 2023, 05:02 PM IST

Thoothukudi Violence: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Thoothukudi Violence: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Thoothukudi Violence: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Nagai MP Selvaraj Passed Away: நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

What is Goondas Act: ‘யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?

Annamalai: ‘அண்ணாமலைக்கு அதிர்ச்சி! அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு’ வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

Savukku Shankar Arrest: ’யூடியூபரும் பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!’

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடில் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த நிலையில், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு நவம்பர் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி