தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அமைச்சர்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடமாற்றம்..!

அமைச்சர்கள் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடமாற்றம்..!

Karthikeyan S HT Tamil

Sep 29, 2023, 09:11 PM IST

Justice Anand Venkatesh: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Justice Anand Venkatesh: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Justice Anand Venkatesh: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தானாக முன்வந்து விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்தவகையில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு மாற்றியுள்ளார். அதன்படி, அக்டோபர் 3, 2023 முதல் டிசம்பர் 22, 2023 வரை 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை அவர் விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் அடிக்கடி தென்படும் முகமாக இருந்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி