தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால்துறை வேலை – விவரங்கள் உள்ளே…

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தபால்துறை வேலை – விவரங்கள் உள்ளே…

Priyadarshini R HT Tamil

Feb 10, 2023, 01:02 PM IST

Job Opportunity: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கே தபால் துறையில் தற்காலிகமாக கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் உள்ளிட்ட 40,899 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40 ஆயிரத்து 899 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தபால் துறை வெளியிட்டுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

இதில், தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 167 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானது. மேலும் தமிழ் படித்திருக்கவேண்டும். இந்த பணியிடங்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்து 380 வரை வழங்கப்பட உள்ளது. 

மேலும் இந்த பணிகளுக்கு தேர்வு இல்லாமல் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை ‘ஆன்லைன்' மூலமாக மட்டுமே நடைபெறும். அதற்கு தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரர்கள் அவர்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்த பட்டியலில் இடம்பெறுபவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அப்போது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ், திருநங்கை என்றால் அதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட உண்மையான சான்றிதழ்களுடன், 2 நகல்களும் வைத்திருக்கவேண்டும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி