தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Irctc Outage : ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கம்! பயணிகள் அவதி!

IRCTC Outage : ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கம்! பயணிகள் அவதி!

Priyadarshini R HT Tamil

Jul 25, 2023, 01:00 PM IST

IRCTC Outage : ஐஆர்சிடிசி கூறுகையில், மேக் மை டிரிப், அமேசான், பி2சி பிளேயர்ஸ் ஆகிய தளங்கள் வழியாக டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
IRCTC Outage : ஐஆர்சிடிசி கூறுகையில், மேக் மை டிரிப், அமேசான், பி2சி பிளேயர்ஸ் ஆகிய தளங்கள் வழியாக டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

IRCTC Outage : ஐஆர்சிடிசி கூறுகையில், மேக் மை டிரிப், அமேசான், பி2சி பிளேயர்ஸ் ஆகிய தளங்கள் வழியாக டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்கு இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம், ஆப் இரண்டிலும் டிக்கெட் புக் செய்யும்போது பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்த பலர் பிரச்னைகள் ஏற்படுவதாக ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளனர். இணையதளத்தில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, செயலிழப்புக்கு IRCTC பதிலளித்தது, அது தீர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஐஆர்சிடிசியின் டிவிட்டில், தொழில்நுட்ப காரணங்களால், டிக்கெட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் தொழில்நுட்பக்குழு பிரச்னைகளை சரிசெய்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டவுடன் நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. ஐஆர்சிடிசி தனது வாடிக்கையாளரை வேறு சேவையாளர்கள் மூலம் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது. ஐஆர்சிடிசி கூறுகையில், மேக் மை டிரிப், அமேசான், பி2சி பிளேயர்ஸ் ஆகிய தளங்கள் வழியாக டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தப்பிரச்னையால் தட்கல் டிக்கெட் முன்பதிவு மிகவும் மோசமாக உள்ளது. ஏசி தட்கல் புக்கிங் 10 மணிக்கும், ஏசி அல்லாத தட்கல் புக்கிங் 11 மணிக்கும் நடைபெறும்.

இதுவரை 300க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. 8 மணி முதலே பிரச்னைகள் துவங்கிவிட்டதுடன், கட்டணம் செலுத்துவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

 

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகிறார்கள். இன்று ஏற்பட்ட இந்த செயலிழப்பால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி