தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Balveer Singh Case : பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து.. காரணம் இதுதான்!

Balveer Singh Case : பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ரத்து.. காரணம் இதுதான்!

Divya Sekar HT Tamil

Jan 22, 2024, 07:42 PM IST

பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரை மிக கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல் 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவரை, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்சனை செய்ததாக போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரது பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கி எடுத்தாக புகார் எழுந்தது. ஏஎஸ்பி பல்பீர் சிங் சூர்யாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, அவரது பற்களை பிடுங்கி எடுத்துவிட்டார். வலியால் தான் அலறி துடித்ததாக சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னைபோலவே, 40 பேருக்கு மேல், பற்களை பிடுங்கிவிட்டதாக, பல்பீர் சிங் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், இடுக்கியை பயன்படுத்தியே, பற்களை பிடுங்கி எடுத்ததாகவும், இதனால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இந்தப் புகார் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை நடத்தியது. இதுவரை இரண்டு கட்டமாக நடந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதன் பிறகு அவர் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 15 போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்றுவந்தது. பல்வீர் சிங் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த மாதம் 15-ந்தேதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்துசெய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 10 மாதத்திற்கும் மேல் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலுள்ள வழக்கின் தீர்ப்புக்க ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வீர் சிங் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி நீண்ட நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட கூடாது என்பதற்காக தற்போது அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பல்வீர் சிங்கிற்கு பொறுப்பும் வழங்கப்பட இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி